இந்தியா

மும்பை: நீரவ் மோடியின் கடற்கரையோர மாளிகை வெடிபொருட்கள் வைத்து தகர்ப்பு

PTI


மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி வங்கிக் கடன் மோசடி செய்துவிட்டு இந்தியாவில் இருந்து தப்பியோடிய நீரவ் மோடிக்கு சொந்தமான கடற்கரையோர மாளிகை வெடிபொருள் வைத்துத் தகர்க்கப்படுகிறது.

மும்பையில் உள்ள கடற்கரையோர மாளிகையை டெட்டனேட்டர் வைத்துத் தகர்க்கும் பணி நடந்து வருவதாக ரெய்காட் மாவட்ட ஆட்சியர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.

மாளிகையின் தூண்கள் டெட்டனேட்டர்கள் வைத்து தகர்க்கும் பணிக்காக தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்த மாளிகை, பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் பெற்ற கடனுக்காக அடமானம் வைக்கப்பட்டு, அமலாக்கத் துறையால் சீலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாளிகையில் இருந்து 2 டிரக்குகள் நிறைய விலைமதிப்புள்ள ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்திருக்கும் அமலாக்கத்துறை அதனை ஏலம் விட திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT