முகப்பு
கிரிக்கெட்

இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்; அரையிறுதியில் யார்?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 195 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 9:29 PM
- படம் | AP
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 9:23 PM

டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 195 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் விளையாடியது.

Advertisement

Updated On : 1 மார்ச், 2026 at 9:24 PM

இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு! அரையிறுதியில் யார்?

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் 22 பந்துகளில் 37 ரன்களும் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ரோவ்மன் பௌவல் 19 பந்துகளில் 34 ரன்களும் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

Updated On : 1 மார்ச், 2026 at 9:24 PM

கேப்டன் சாய் ஹோப் 32 ரன்கள், ஷிம்ரன் ஹெட்மேயர் 27 ரன்கள் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 14 ரன்கள் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

summary

The West Indies team, batting first, scored 195 runs in the Super 8 round match against India in the T20 World Cup.

Updated On : 2 மார்ச், 2026 at 5:11 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.