பட்டாசுகளுடன் ஒப்பிடும் பொழுது வாகனங்களால்தான் காற்று மாசுபாடு அதிகம்: உச்ச நீதிமன்றம் கருத்து
நாடு முழுவதும் பட்டாசுகளுடன் ஒப்பிடும் பொழுது வாகனங்களால்தான் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் பட்டாசுகளுடன் ஒப்பிடும் பொழுது வாகனங்களால்தான் காற்று மாசுபாடு அதிகம் ஏற்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுகளால் அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது என்று கூறி, அவற்றைத் முற்றிலும் தடை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட அமர்வு முன் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:
நாடுமுழுவதும் பட்டாசுகள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றால் ஏற்படும் காற்று மாசுபாடு விகிதம் பற்றி ஏதேனும் ஒப்பீட்டு ஆய்வு நடந்துள்ளதா? அதுபற்றிய தகவல் இருக்கிறதா?
தற்போது பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் வேலை இழந்து உள்ளனர். அந்த தொழிலில் வேலைவாய்ப்பின்மையை உருவாக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை.
பட்டாசுகளை பற்றி நீங்கள் இங்கு பேசுகிறீர்கள். ஆனால் காற்று மாசுபாடு ஏற்படுத்துவதில் உண்மையில் வாகனங்கள் அதிக பங்கு வகிக்கின்றன.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.