இந்தியா

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர்: ராணுவம்

PTI


ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா பேசுகையில், உயிரிழந்த ஷௌகத் அகமது நாயக், ராணுவத்தில் சேர்ந்தாரே தவிர, அவர் ராணுவ வீரராக பதவியேற்றுக் கொள்வில்லை.

கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ராணுவ படைக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வாகி, ஜம்மு காஷ்மீரில் பயிற்சி முடித்தார். அதன்பிறகு செப்டம்பர் மாதம் அவர் விடுமுறையில் சென்று மீண்டும் பணியில் சேரவில்லை.

எனவே, அவர் செப்டம்பர் மாதமே ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT