இந்தியா

மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தலா? பாஜகவுக்கு எதிராக திரிணமூல் தர்னா

DIN


மேற்கு வங்க மாநிலத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்க தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியதை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் 48 மணி நேர தர்னாவை தொடங்கியுள்ளனர். 

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அம்மாநிலத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியிருந்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேற்கு வங்க மாநிலத்துக்கு பாஜக தீங்கு விளைவிக்கிறது என்று குற்றம்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி 48 மணி நேர தர்னா போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மகளிர் அணி தலைவர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறுகையில், 

"மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு அடித்தளமே இல்லை. எனினும், பாஜக மத்திய படைகளை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறது. அவர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு ராணுவ வீரரை களமிறக்கி குவித்தாலும், நாங்கள் தான் தேர்தலில் வெற்றி பெறுவோம். 

மாநிலத்தில சட்டம் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது. இருப்பினும், மேற்கு வங்க மாநிலத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்க பாஜக கோரிக்கை விடுக்கிறது. இது மேற்கு வங்க மாநில மக்களுக்கு அவமானம் இல்லையா? மாநிலத்துக்கு எந்த விதத்தில் தீங்கு விளைவிக்க முயற்சித்தாலும் நாங்கள் போராடுவோம்" என்றார்.  

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இந்த தர்னா போராட்டம் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸ் இந்த நாடகத்தை நிறுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிடவேண்டுமா அல்லது தர்னா போராட்டத்தை தொடர வேண்டுமா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT