இந்தியா

அழிவின் விளிம்பில் ஜெட் ஏர்வேஸ்: பிரதமருக்கு விமானிகள் கடிதம்

ஜெட் ஏர்வேஸ் அழிவின் விளிம்பில் உள்ளதாக அந்நிறுவனத்தின் விமானிகள் குழு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

DIN


ஜெட் ஏர்வேஸ் அழிவின் விளிம்பில் உள்ளதாக அந்நிறுவனத்தின் விமானிகள் குழு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் ஏறக்குறையை அழிவின் விளிம்பு நிலைக்கு வந்து விட்டது. நிவாரணம் பெறக்கூடிய எந்தவித திட்டங்களும் இல்லாததால் நிறுவனம் பெரும் நிதி நிருக்கடியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, இந்திய விமானப் போக்குவரத்து துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
விமானங்களின் பயன்பாடு குறைந்து பயணிகள் கட்டணம் அதிகரிக்கவும், விமான போக்குவரத்தில் பயணிகள்  பல இன்னல்களை சந்திக்கவும் நேரிடும்.
ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் மற்றும் பொறியாளர்களின் மூன்று மாதம் சம்பளம் நிலுவையில் உள்ளது. இதனால், அவர்கள் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT