இந்தியா

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி தில்லியில் கைது

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். 

DIN

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதி கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியலையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டு வீச்சு நடத்தின. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி சஜத்கான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிரின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT