இந்தியா

ராஜ் பப்பர் போட்டியிடும் தொகுதி மாற்றம்

DIN

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தொகுதியை காங்கிரஸ் தலைமை மாற்றியுள்ளது. மொராதாபாத் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, பதேபூர் சிக்ரி தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இம்ரான் பிரதாப்கர்ஹியா, மொராதாபாத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
பாஜக எம்.பி.யான கன்வர் சர்வேஷ் குமார் மொராதாபாதில் போட்டியிடவுள்ளார். அந்தத் தொகுதியில் போட்டியிட ராஜ் பப்பர் ஆர்வம் காட்டவில்லை.
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அசோக் சிங்கை தொடர்புகொண்டு கேட்டபோது, "ராஜ் பப்பர் ஏற்கெனவே பதேபூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அந்தத் தொகுதி குறித்து அவர் நன்கு அறிவார்' என்றார்.
இதேபோல், பிஜ்னோர் தொகுதியில் ஏற்கெனவே இந்திரா பட்டி போட்டியிடுவதாக இருந்தது. தற்போது நஸீமுதீன் சித்திக் அங்கு போட்டியிடவுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு விலகி காங்கிரஸில் இணைந்தவர் நஸீமுதீன்.
ராஜ் பப்பர், 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் ஆக்ரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பதேபூர் சிக்ரி தொகுதியில் கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் சீமா உபாத்யாயவிடம் 9,936 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் ராஜ் பப்பர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT