இந்தியா

ரூ.8 ஆயிரம் கோடி கடன்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் விலகல்

DIN

ரூ.8 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டுள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் திங்கள்கிழமை விலகினார்.

முன்னதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக்குழுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது கடன் பிரச்னையை தீர்க்க மேற்கொண்டு இடைக்கால நிதி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் அக்குழுமத்தில் இருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு பெரும்பான்மையான கடன் தொகை வழங்கியுள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்த இடைக்கால நிதியை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பலதரப்பட்ட ஊழியர்கள் இதர நிறுவனங்களில் வேலை தேட தொடங்கியுள்ளனர். மேலும், அவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஊழியர்களின் மொத்த ஊதியத்தில் இருந்து 12.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT