முகப்பு
இந்தியா

பயங்கரவாதம் இனியும் தொடரும்: கபில் சிபல் ட்வீட்

துல்லியத் தாக்குதல்களால் மட்டுமே பயங்கரவாதம் அழிந்துவிடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:49 AM
பகிர்:

துல்லியத் தாக்குதல்களால் மட்டுமே பயங்கரவாதம் அழிந்துவிடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டதாவது:

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு துல்லியத் தாக்குதல்களும், ஐ.நா. அறிவிக்கும் சர்வதேச பயங்கரவாத அங்கீகாரங்களும் மட்டும் போதாது. பயங்கரவாதம் நடந்தது, நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அது இனியும் தொடரும்.

எனவே பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு துல்லியத் தாக்குதல்கள் மட்டுமல்லாது அறுவை சிகிச்சைகளும் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் 6 முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பட்டியலிட்டு, அவை ஒருபோதும் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தியதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.