இந்தியா

பள்ளி மாணவர்களின் உடல் எடையில் 10% மட்டுமே புத்தகப்பை எடை இருக்க வேண்டும்: சொன்னது?

ENS


பெங்களூரு: ஒவ்வொரு பள்ளி மாணாக்கரின் உடல் எடையில் சராசரியாக 10 சதவீதம் மட்டுமே பள்ளிப் புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பள்ளிப் பாடப் புத்தகங்களின் பையின் எடை குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

அதாவது ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகப் பை 1.5 அல்லது 2 கிலோவுக்கு மிகாமலும், 3 மற்றும் 4, 5வது படிக்கும் மாணவர்களின் பாடப்புத்தகப் பையின் எடை 2 முதல் 3 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

6 - 8ம் வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகப் பை 3 - 4 கிலோவும், 9-10ம் வகுப்புக்கு 5 கிலோவும் இருக்கலாம்.

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்ததை அடுத்து பள்ளிக் கல்வித்துறை இந்த அறிக்கையை அனுப்பியுள்ளது.

அது மட்டுமில்லாமல் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, ஒவ்வொரு மாதமும் 3வது சனிக்கிழமை புத்தகப்பை இல்லாமல் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். அன்று இதர விளையாட்டு, திறன் வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT