இந்தியா

ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை: மத்திய அரசின் புதிய பிரமாணப் பத்திரம்

DIN


புது தில்லி: ரஃபேல் சீராய்வு மனு மீது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ரஃபேல்  ஒப்பந்தத்தில் எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் சீராய்வு மனு மீது மத்திய அரசு தாக்கல் செய்த புதிய பிரமாணப் பத்திரத்தில், முந்தைய ஒப்பந்தத்தை விடவும், புதிய ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானத்தின் விலை 2.86% குறைவாகவே வாங்கப்பட்டதாக மத்திய தணிக்கைத் துறை தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டாம் என்றும், திருடப்பட்ட சில ஆவணங்களைக் கெண்டு தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ரஃபேல் ஒப்பந்த விலைகளை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். புதிய ரஃபேல் ஒப்பந்தம் எந்த இடைப்பேச்சுக்கும் வழிவகை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT