இந்தியா

காஷ்மீரில் பாஜக துணைத் தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவா் பயங்கரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

ANI

ஜம்மு-காஷ்மீா் மாநிலம், அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவா் பயங்கரவாதிகளால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

அனந்த்நாக் மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்தவா் குல் முகம்மது மீா். நெளகாம் வொ்னிக் பகுதியில் உள்ள வீட்டில் மீா் இருந்தபோது, அங்கு 3 பயங்கரவாதிகள் வந்தனா். அகமது மீரிடம் அவரது காரின் சாவியைத் தருமாறு பயங்கரவாதிகள் மிரட்டி எடுத்துச் சென்றனர்.

இதன்பின்னா் காரை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது மீா் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் பலத்த காயமடைந்த மீா், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டாா். எனினும், அவா் பரிதாபமாக உயிரிழந்தாா்.

மீரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை தேடும் பணியை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT