இந்தியா

பாகிஸ்தான் கடலோர காவல்படையினரால் 30 இந்திய மீனவர்கள் கைது

DIN

அரபிக்கடலில் சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த 30 மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல்படையினர்  (பிஎம்எஸ்ஏ) திங்கள்கிழமை அதிகாலை கைது செய்தனர். 
இதுகுறித்து போர்பந்தரிலுள்ள தேசிய மீனவ தொழிலாளர்கள் சங்க செயலாளர் மணீஷ் லோதாரி மேலும் கூறியதாவது: 
பாகிஸ்தான் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக கூறி அப்பகுதியில் ரோந்து வந்த பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் 30 மீனவர்களை கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய 6 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர். 
கைது செய்யப்பட்டவர்கள் கராச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 6 மீன்பிடி படகுகளும் புதிதாக வாங்கப்பட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்புதான் போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து கிளம்பி சென்றது. சர்வதேச கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை குறிவைத்து பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT