இந்தியா

இடஒதுக்கீடு: மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

DIN


நிகழாண்டு மருத்துவ முதுகலைப் பட்டப்படிப்பில் சேருவதற்கு மராத்தா சமூக மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மகாராஷ்டிர அரசு நியாயம் தேடித் தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கும் மராத்தா சமூகத்தினருக்கு, அரசு வேலைவாய்ப்புகள், கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் கடந்த ஆண்டு தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். 
அதையடுத்து கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, மகாராஷ்டிர சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கான சேர்க்கையின்போது, மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்குமாறு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு மகாராஷ்டிர அரசு கடிதம் அனுப்பியது.
அதன்படி, முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் சுமார் 250 மாணவர்கள் சேர்ந்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின்போது, நிகழாண்டு மருத்துவ முதுகலை பட்டப்படிப்புக்கு மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கோர முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்ற 250 மாணவர்களின் சேர்க்கையும் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையிட்டனர்.
அதையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT