இந்தியா

பாஜக-வின் வெறுப்பு அரசியல் காரணமாகவே ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார்: அகமது படேல்

பாஜக-வின் வெறுப்பு அரசியல் காரணமாகத்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் விமர்சித்துள்ளார். 

ANI

பாஜக-வின் வெறுப்பு அரசியல் காரணமாகத்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

மறைந்த பிரதமரை விமர்சிப்பது கோழைத்தனத்தின் உச்சகட்டமாகும். உண்மையில் ராஜீவின் படுகொலைக்கு யார் காரணம்? 1991-ல் பாஜக ஆதரவு வி.பி.சிங் அரசாங்கம் தான் ராஜீவுக்கு வேண்டுமென்றே கூடுதல் பாதுகாப்பை வழங்க மறுத்தது. 

எனவே தான் அவரது உயிரிழப்பு ஏற்பட்டது. தற்போது ராஜீவ் மீது வைக்கப்பட்டுள்ள அடிப்படை ஆதாரமற்ற போலி விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி அளிக்க அவர் இன்று உயிருடன் இல்லை என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT