இந்தியா

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம்

DIN

அயோத்தி வழக்கில், மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு,  இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல.

நிலம் தொடர்பான பிரச்னை என்றால், எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், ஹிந்து-முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தர் குழுவை நியமிக்கிறோம் என்று கூறி முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் கடந்த மார்ச் மாதம் மத்தியஸ்தர் குழுவை நியமித்தது. 

ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றனர். இக்குழு இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சு நடத்தி, தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மே 6-ஆம் தேதி தாக்கல் செய்தது. 

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் அயோத்தி வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, சமரசப் பேச்சுவார்த்தையை முழுவதுமாக முடிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்தியஸ்தர் குழு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மத்தியஸ்தர் குழுவுக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

SCROLL FOR NEXT