பிரசாரத்தின் இறுதி நாளில்.. மோடி அரசின் ரிப்போர்ட் கார்டை வாசித்தார் அமித் ஷா
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
புது தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சந்திப்பின் போது அமித் ஷா கூறியதாவது, பாஜகவின் நீண்ட மற்றும் வெற்றிகரமான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் பாஜக பிரசாரம் மேற்கொண்டது.
ஏழைகள், விவசாயிகள், பெண்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் பாஜக அரசு கவனம் செலுத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு 133 நலத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு பாஜகவுக்கு இந்த தேர்தல்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்று அமித் ஷா கூறினார்.