முகப்பு
இந்தியா

தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவோம்: மோடி

தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:55 AM
பகிர்:

புது தில்லி: தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், பிரதமர்  மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது மோடி பேசியதாவது, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட இந்த ஆண்டு பாஜகவின் தேர்தல் பிரசாரம் மிகப்பெரிய அளவில் இருந்தது.

மக்களின் ஏகோபித்த ஆதரவு எங்களுக்கு இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது ஜனநாயக முறையால், உலக நாடுகளை நம் பக்கம் ஈர்த்துள்ளோம். நாட்டின் நிர்வாக முறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், பாஜக அளித்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவோம். தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

கடந்த இரண்டு தேர்தல்களின் போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. ஆனால், தற்போது ரமலான் பண்டிகை, ஐபிஎல் போட்டி, பள்ளி இறுதித் தேர்வுகள் அனைத்தும் பாஜக எனும் வலிமையான ஆட்சியால் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது எனது ஒரு கூட்டம் கூட எந்தவொருக் காரணத்துக்காகவும் ரத்து செய்யப்படவில்லை என்று மோடி பேசினார்.

மேலும், தேர்தல் பிரசாரம் இன்றோடு நிறைவு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சற்று ஓய்வு எடுக்கலாம். நன்றி என்று மோடி தனது பேச்சை நிறைவு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.