இந்தியா

பிரக்யா சர்ச்சை கருத்து: தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்பு

DIN


போபால்: மத்திய பிரதேசத்தில் போபால் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங் தாக்குர் கோட்சே குறித்து வெளியிட்ட சர்ச்சை கருத்து தொடர்பான அறிக்கையை அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்.

இதுகுறித்து மத்தியப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி விஎல் காந்த்ராவ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

போபால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா,  கோட்சே குறித்து வெளியிட்ட சர்ச்சை கருத்து தொடர்பான  மாநில தேர்தல் அதிகாரிகளின் அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளின்  அடிப்படையில்  இந்த விவகாரத்தில் இறுதி முடிவை தலைமை தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும் என்றார் அவர். 

நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் வியாழக்கிழமை தெரிவித்தார். இதற்கு பாஜக கட்சி உள்பட அனைத்து தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும், அந்த கருத்தை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்திக்காடு கிராம விவசாயிகளுக்கு பயறு வகை சாகுபடி பயிற்சி

கேழ்வரகு கொள்முதல் கால அவகாசம் நீட்டிப்பு

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

SCROLL FOR NEXT