இந்தியா

கோவிலில் கோட்ஸே பிறந்தநாள் கொண்டாட்டம்: குஜராத்தில் ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது 

DIN

அகமதாபாத்: குஜராத் மாநில கோவில் ஒன்றி நாதுராம் கோட்ஸேவின் பிறந்தநாளைக் கொண்டாடிய   ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா சுதநதிரம்பெற்ற பின்பு தேசப்பிதா மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே என்பவர் தில்லியில் நடந்த பிராரத்தனை கூட்டத்தில் சுட்டுக் கொன்றார். மகாராஷ்டிராவில் புனே மாவட்டத்தில் உள்ள பராமதி என்ற இடத்தில் கடந்த 1910ம் ஆண்டு மே 19ந்தேதி பிறந்தவர்தான்நாதுராம் கோட்சே.

இந்நிலையில் குஜராத் மாநில கோவில் ஒன்றி நாதுராம் கோட்ஸேவின் பிறந்தநாளைக் கொண்டாடிய   ஹிந்து மஹா சபா தொண்டர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

குஜராத்தின் சூரத் நகரில் அமைந்துள்ள லிம்பியாயத் சூரியமுகி அனுமன் கோவிலில் ஹிந்து மகா சபையை சேர்ந்த சிலர் ஞாயிறன்று கோட்சேவின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.  கோவிலில் கோட்சேவின் புகைப்படம் வைத்து அதனை சுற்றி விளக்கேற்றி உள்ளனர். அத்துடன் அங்குள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கி, கோவிலில் பஜனை பாடல்களை படித்தும் உள்ளனர். 

இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவின. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று குறிப்பிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். 

அவர்கள் சமூக அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக குறிப்பிட்ட போலீசார், தொடர்புடைய பல்வேறு பிரிவுகளின் கீழ் அவரகள் மீது வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி மா்மமான முறையில் உயிரிழப்பு

வாக்கு எண்ணும் மையம் அருகே ட்ரோன் பறக்க தடை: ஆட்சியா் உத்தரவு

கொள்ளிடம் பகுதியில் குப்பைகள் கொட்ட விரைந்து இடம் தோ்வு செய்ய வலியுறுத்தல்

மாநில சிலம்பப் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT