இந்தியா

மாற்று அரசியலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காங்கிரஸ் அழிய வேண்டும்: யோகேந்திர யாதவ்

DIN

பாஜக-வை வெல்ல முடியாத காங்கிரஸ் கட்சி அழிந்து போவது தான் நல்லது என ஸ்வராஜ் இந்தியா கட்சித் தலைவர் யோகேந்திர யாதவ் சாடினார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

எதையும் மிகைப்படுத்தாமல், சற்றும் கோபமடையாமல், எந்த உணர்வுக்கும் இடமளிக்காமல் அனைத்து முக்கியத்துவத்துக்கும் இடமளித்து இதை தெரிவிக்கிறேன், காங்கிரஸ் கட்சி அழிய வேண்டும்.

இந்த தேர்தலில் நாட்டை காப்பாற்றும் நோக்கத்தோடு பாஜக-வை தடுக்க முடியாமல், மாற்று அரசியலுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்திய வரலாற்றில் எவ்வித நேர்மறை பங்கும் கிடையாது. பாஜக-விடம் இருந்து நாட்டை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

நாட்டின் ஆன்மாவுக்கான தேர்தலாக இது இருந்தது. ஒருமித்த தேசம் என்ற ஒற்றை மந்திரம் இந்த தேர்தலில் பிரதான பணயமாக இருந்தது. அப்படிப்பட்ட தேர்தலில் அரசியலமைப்பின் பாதுகாவலனாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, இந்தியா மதசார்ப்பற்ற நாடு என்று கூறி வரும் காங்கிரஸ் கட்சி, பாஜக-வுக்கு எதிராக சரியான சவாலை அளிக்கவில்லை. எனவே அக்கட்சி இனியும் இருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

மாற்று அரசியல் தேவை என்ற தருணத்தில் அதை சாதிக்க எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸால் இயலவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு இந்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை நான் மறுக்கவில்லை. ஆனால், இனியும் அவர்களுக்கு இந்திய அரசியல் வரலாற்றில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT