இந்தியா

அருணாச்சலப்பிரதேசத்தில் தீவிரவாத தாக்குதல்: எம்.எல்.ஏ உட்பட 7 பேர் பலி 

அருணாச்சலப்பிரதேசத்தில் செவ்வாயன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் என்.பி.பி கட்சி  எம்.எல்.ஏ உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியாகியுள்ளனர்.

ANI

இடா நகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் செவ்வாயன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் என்.பி.பி கட்சி  எம்.எல்.ஏ உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தல் நிறைவுபெற்று அனைவரும் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றனர்   

இந்நிலையில் அருணாச்சலப்பிரதேசத்தில் செவ்வாயன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் என்.பி.பி கட்சி எம்.எல்.ஏ உட்பட அவரது குடும்பதினர் 7 பேர் பலியாகியுள்ளனர்.

அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு கோன்ஸா பகுதியில் செவ்வாய் மதியம் இந்த தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.

இதில் என்.பி.பி கட்சி  எம்.எல்.ஏ திராங் அபோ உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியாகியுள்ளனர்.   என்.எஸ்.சி.என் தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.   

இந்த தாக்குதலுக்கு என்.பி.பி கட்சி தலைவரும், மேகாலயா மாநில முதல்வருமான கான்ராட் ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இது தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்   அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிக்கப் பிறந்தவர்கள் தனுசு ராசிக்காரர்கள்!

புதிய சீரியலில் நடிக்கும் பாக்கியலட்சுமி சுசித்ரா!

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

அடுத்த 4 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

நண்பர்களைத் தவிர்த்து... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!

SCROLL FOR NEXT