இந்தியா

போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை 

இந்திய விமானப்படையின் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.

PTI

புது தில்லி: இந்திய விமானப்படையின் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் ரஷியா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணையானது சுமார்  200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக தரையில் இருந்து விண்ணுக்கு ஏவி பிரமோஸ் பரிசோதிக்கப்பட்டது. அதையடுத்து இந்த ஏவுகணையானது 2003-ம் ஆண்டு கடலில் இருந்து விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணையானது புதனன்று வெற்றிகரமாக போர் விமானத்தில் இருந்து ஏவி சோதனை செய்யப்பட்டது. 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

அதைப் பற்றி எதுவும் தெரியாது! இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!

SCROLL FOR NEXT