முகப்பு
இந்தியா

மே 26 ல் இரண்டாம் முறையாக பதவியேற்கிறார் மோடி?  

எதிர்வரும் மே 26 ல் இரண்டாம் முறையாக பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாக தில்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:58 AM
பகிர்:

புது தில்லி: எதிர்வரும் மே 26 ல் இரண்டாம் முறையாக பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாக தில்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.

இந்நிலையில் எதிர்வரும் மே 26 ல் இரண்டாம் முறையாக பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாக தில்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் நடைபெற உள்ள இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர்கள், தேசிய  ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →