இந்தியா

இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டார் மோடி: சீன கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு

DIN

இந்திய பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவிலான முயற்சிகளை மேற்கொண்டார் என சீன கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டியுள்ளது. 
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினரும், குய்úஸாவூ மாகாண குழு நிர்வாகியுமான மு டெகுய் பிடிஐ செய்தியாளரிடம் கூறியது: 
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் தலைமையின் கீழ் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவும், சீனாவும் நீண்டகாலமாக நட்பைப் பேணி வரும் நாடுகளாகும். 
சீனாவை பொருத்தவரை இந்திய-சீனா இடையே பரஸ்பரம் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே கருதுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியுடன் ஆழ்ந்த அரசியல் நட்புடன், ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம் என்று தெரிவித்தார். 
முன்னதாக, இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மோடி மீண்டும் வெற்றி பெறுவது உறுதியான செய்தி வெளியான உடன், அவருக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT