முகப்பு
இந்தியா

பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 ஆம் தேதி துவக்கம்? 

பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:00 AM
பகிர்:

புது தில்லி: பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரு வெற்றி பெற்றதையடுத்து வரும் 30 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 31 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 6 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜூன் 6 ஆம் தேதி  தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு, புதிய எம்பிக்களுக்கு அவரே  பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதையடுத்து நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார்.

மக்களவை சபாநாயகர் ஜூன் 10 ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் எனவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

முழு கட்டுரையைப் படிக்க →