இந்தியா

பயங்கரவாதம்: காஷ்மீரில் 4 மாதங்களில் 61 வீரர்கள், 11 பொதுமக்கள் உயிரிழப்பு

DIN


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களால், நிகழாண்டில் கடந்த ஏப்ரல் வரை பாதுகாப்புப் படை வீரர்கள் 61 பேரும், பொதுமக்கள் 11 பேரும் உயிரிழந்தனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரோஹித் செளதரி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் சுலேகா அளித்த பதில்:
நிகழாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 177 பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தச் சம்பவங்களில், பாதுகாப்பு படை வீரர்கள் 61 பேரும், பொதுமக்கள் 11 பேரும் உயிரிழந்தனர்.
இதேபோல், பாதுகாப்புப் படை வீரர்கள் 73 பேரும், பொதுமக்கள் 69 பேரும் காயமடைந்துள்ளனர் என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 மாதங்களில் 86 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று வடக்கு பிராந்திய தலைமை ராணுவ தளபதி ரண்பீர் சிங் கூறினார். 
அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 4 மாதங்களில் 11 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 450 பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள், எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் முகாமிட்டு பாகிஸ்தான் ஆதரவு இயங்கி வருகிறார்கள். அவர்களுக்கு எதிரான எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றார் ரண்பீர் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT