இந்தியா

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 

ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்க உள்ள விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்க உள்ள விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 176 இடங்களைக் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில்  151 இடங்களில் வென்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதையடுத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30-ஆம் தேதி மதியம் ஆந்திர முதலமைச்சராக பதவியேற்கிறார்.

இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வரிசையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆந்திர முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்க உள்ள விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் புதிய தலைநகரர் அமராவதியில் நிகழ்வு நடக்கவுள்ள நிலையில் புதன் இரவு ஸ்டாலின் அமராவதி புறப்படுவார் என்று தெரிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி வேன் மோதி இருவா் உயிரிழப்பு

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

மணப்பாறை அருகே மாணவி தற்கொலை

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரைக் கொல்ல முயன்ற கும்பல் பயன்படுத்திய காா் பறிமுதல்

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

SCROLL FOR NEXT