இந்தியா

திருமணம் செய்து வைத்த புரோகிதருடன் ஓட்டம் பிடித்த புது மணப்பெண்! 

திருமணமான இரு வாரங்களில் தனக்குத் திருமணம் செய்து வைத்த புரோகிதருடனே,   புது மனப்பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

போபால்: திருமணமான இரு வாரங்களில் தனக்குத் திருமணம் செய்து வைத்த புரோகிதருடனே,   புது மனப்பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் சிரோன்ஜ் மாவட்டத்தைச் சேர்ந்த அசாத் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் மகாராஜ். அங்குள்ள கோவிலொன்றில் புரோகிதராக பணியாற்றி  வருகிறார்.இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு அந்த ஊரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும், அருகில் உள்ள டோரி பக்ரோட் கிராமத்திச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 7-ஆம் தேதி  திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை புரோகிதராக இருந்து வினோத் நடத்தி வைத்துள்ளார்.

திருமணமாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு கடந்த 23-ஆம் தேதி தனது கிராமத்திற்கு வந்த அந்த புதுப்பெண் திடீரென மாயமானார். அவரை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் எல்லா இடங்களிலும் தேடிய போதுதான் புரோகிதர் வினோத்தும் மாயமான விஷயம் தெரிய வந்தது.

பின்னர் நடந்த விசாரணையில் வினோத்துக்கும், அந்த பெண்ணுக்கும் இரண்டு ஆண்டுகளாக பழக்கம் இருந்த நிலையில் இருவரும் தற்போது ஓடிப் போயுள்ளது தெரிய வந்தது.

அத்துடன் ஓடிப் போகும் போது அப்பெண் தனது வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.30,000 பணத்தையும் எடுத்து கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக சிரோன்ஜ் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT