இந்தியா

பிரதமர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் நிச்சயம் பங்கேற்கும்: குலாம் நபி ஆசாத்

DIN


நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று (புதன்கிழமை) தெரிவித்தார். 

நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை (வியாழக்கிழமை) மாலை 7 மணிக்கு மீண்டும் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உலகத் தலைவர்கள், தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள் என சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிம்ஸ்டெக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்பதாக தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று பேசுகையில், 

"பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் நிச்சயமாக பங்கேற்கும். தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கும், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலானது. ஆனால், இது பிரதமர் பதவியேற்கும் விழா. அவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரதமர். நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் அவர் சரிசமமாக நடத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT