இந்தியா

நாட்டின் 15-வது பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி

குடியரசுத் தலைவர் மாளிகையில், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றார்.

DIN


குடியரசுத் தலைவர் மாளிகையில், நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றார். 

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடியின் பிரதமர் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், உலகத் தலைவர்கள் என விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, விழாவுக்கு குடியரசுத் தலைவர் வருகை தந்தார். அவரது வருகையை அடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றார். 
இவரைத்தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, சதானந்த கௌடா, நிர்மலா சீதாராமன், ராம் விலாஸ் பஸ்வான், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்சிமரத் கௌர், தாவர்ச்சந்த் கெலாட் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில்மலையாற்றின் குறுக்கே ரூ.176.02 கோடியில் அணைக்கு அடிக்கல்

உத்திசார் நட்புக் கூட்டணி!

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

சாலை விபத்தில் பேரூராட்சி பணியாளா் உயிரிழப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

SCROLL FOR NEXT