இந்தியா

பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும்: ஃபிக்கி

DIN


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் 7.1 சதவீதமாக இருக்கும் என இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 6.8 சதவீதம் என்ற அளவிலும், அதிகபட்சம் 7.3 சதவீதம் என்ற அளவிலும் காணப்படும். 
வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியானது குறைந்தபட்சம் 7.1 சதவீதம் என்ற அளவிலும், அதிகபட்சம் 7.2 சதவீதம் என்ற அளவிலும் காணப்படும்.
நடப்பு நிதியாண்டில் வேளாண் துறை வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும். அதேநேரம், தொழில் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி முறையே 6.9 சதவீதம் மற்றும் 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என ஆய்வில் ஃபிக்கி தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT