இந்தியா

அமேசான், கூகுள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!

அமேசான், கூகுள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

Muthumari

அமேசான், கூகுள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 

அனிதாப்.ஆர்க் என்ற தனியார் நிறுவனம் நடத்தும் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 6-8 தேதிகளில் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாபெரும் வேலைவாய்ப்பு  முகாம், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. படித்த பெண்கள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கவும், பெண்கள் முன்னேற்றத்திற்கான ஒரு முயற்சியாகவும் இது மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அமேசான், கோல்ட்மேன் சாச்ஸ், வெஸ்டர்ன் டிஜிட்டல், வெல்ஸ் பார்கோ, நெட்ஆப், ஆரக்கிள், எஸ்ஏபி, கிரெடிட் சூயிஸ் மற்றும் அடோப் உள்ளிட்ட 50 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.  

கம்ப்யூட்டிங், ஐடி மற்றும் பொறியியல் துறையில் உள்ள பெண் வல்லுநர்கள் மற்றும் மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று நேரடியாக அந்தந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறலாம்.

இந்த நிகழ்வு 'கிரேஸ் ஹாப்பர் செலிபிரேஷன் இந்தியா 19' (Grace Hopper Celebration India 19) என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதற்கு பெண் கணினி விஞ்ஞானி மற்றும் முன்னாள் அமெரிக்க கடற்படை ஊழியரான கிரேஸ் ஹாப்பரின் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT