இந்தியா

தில்லியில் பள்ளிகளுக்கு நவ.8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு!

Muthumari

காற்று மாசு காரணமாக தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 8ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானதால் அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நவம்பர் 5ம் தேதி வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை நவம்பர் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

மேலும், காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு வாகன கட்டுப்பாடும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஒற்றைப் படை, இரட்டைப் படை இலக்க எண்கள் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

தில்லியில் தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மாசுவின் காரணமாகவும், ஹரியாணா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிா்க் கழிவுகளாலும் காற்று மாசு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT