இந்தியா

தாஜ்மஹால் நகரில் காற்று மாசுபாடு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.6.84 கோடி அபராதம்!

Muthumari

புகழ்பெற்ற தாஜ்மஹால் இருக்கும் ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

தில்லியில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தில்லியில் சில தினங்களாக புகைமண்டலம் சூழ்ந்துள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க கட்டுமானப்பணிகள் நிறுத்தம், வாகனக் கட்டுப்பாடு என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மஹால் உள்ள ஆக்ரா நகரமும் காற்று மாசுபாட்டுக்கு ஆளாகியுள்ளது. காற்று மாசுபாட்டினால் தாஜ்மஹாலின் முகப்பிலும் புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து ஆக்ரா நகரில் காற்றை மாசுபடுத்தியதற்காக உத்தரப்பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது. 

நகரைச் சுற்றியுள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஆக்ரா நகரில் காற்று மாசுபாட்டைக் குறைக்க தண்ணீரைப் பாய்ச்சுதல் உள்ளிட்ட துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதை மீறியும், கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டால், கட்டுமானக் கழிவை அப்புறப்படுத்தும் விதிகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT