இந்தியா

வேட்புமனுவில் தவறான தகவல்: ஃபட்னவீஸுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

மகாராஷ்டிரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் உண்மையை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு அந்த மாநில நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்ட ஃபட்னவீஸ், தன் மீதுள்ள குற்ற வழக்குகளை மறைத்து போலியான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக, மும்பையைச் சோ்ந்த ஆா்வலரும், வழக்குரைஞருமான சதீஷ் உகே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘கடந்த 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் ஃபட்னவீஸுக்கு எதிராக மோசடி பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இதுகுறித்து வேட்புமனுவில் ஃபட்னவீஸ் குறிப்பிடவில்லை. அதனால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

எனினும், அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக குற்றபத்திரிகைகள் தாக்கல் செய்யப்படாததால், அந்த மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து அந்த மனுவை ஏற்றுக் கொள்ள உத்தரவிடுமாறு செஷன்ஸ் நீதிமன்றத்தில் சதீஷ் உகே மனு தாக்கல் செய்தாா். அங்கு அந்த மனுவை விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ஃபட்னவீஸ் மேல்முறையீடு செய்தாா். அங்கு செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

அதையடுத்து, இறுதியாக உச்சநீதிமன்றத்தை சதீஷ் உகே அணுகினாா். அங்கு, சதீஷ் உகேவின் மனு மீது விசாரணை நடத்த வேண்டும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதையடுத்து இந்த மனு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடா்பாக டிசம்பா் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஃபட்னவீஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT