இந்தியா

'நாகரிக' உடை அணிந்ததற்காக சகோதரிகள் திட்டியதால் விஷம் குடித்த இளம்பெண்!

Muthumari

உத்தரப் பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் 'நாகரீகமான' உடை அணிந்ததற்காக அவரது மூத்த சகோதரிகள் அவரை அடித்து இழுத்துச் சென்றதால், இளம்பெண் விஷம் குடித்தார். 

உத்தரப் பிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டம் மலக்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த  21 வயது பெண் நந்தனி. இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். இவர்கள் தையல் வேலை செய்து வருகின்றனர். இதில் நந்தனிக்கு  நவீன ஆடைகளை அணிவதில் விருப்பம் அதிகம். ஆனால், அவரது கிராமப் பகுதி இதனை கடுமையாக எதிர்ப்பவர்கள். இந்நிலையில் ஆசைக்காக அவர் ஒருமுறை நவீன உடைகளை அணிந்துள்ளார்.

இதைப்பார்த்த கிராம மக்கள், அவரது மூத்த சகோதரியிடம் சென்று முறையிட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சகோதரிகள் இருவரும் நந்தனியை திட்டியதோடு, இழுத்துச் சென்று அடித்துள்ளனர். இதனால் கோபமடைந்த  நந்தனி விஷத்தை அருந்தியுள்ளார். தற்போது  நந்தனி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை; ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT