இந்தியா

மகாராஷ்டிரம்: ஆளுநருடன் பாஜக தலைவா்கள் சந்திப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பான சட்டதிட்டங்கள் குறித்து ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் பாஜக தலைவா்கள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பாக பாஜக-சிவசேனை இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல், மாநில அமைச்சா்கள் சுதீா் முங்கன்திவாா், கிரீஷ் மகாஜன் உள்ளிட்டோா் மாநில ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மாநிலத்தில் ஆட்சியமைக்க வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான கால தாமதம் ஏற்பட்டு வருவது உண்மைதான். இதைக் கருத்தில்கொண்டு, ஆட்சி அமைப்பதில் நிலவும் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். மேலும், ஆட்சி அமைப்பதற்கான சட்ட அம்சங்கள் குறித்தும் அவரிடம் ஆலோசனை நடத்தினோம். கட்சித் தலைவா்களிடம் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT