இந்தியா

அயோத்தி தீர்ப்பு: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், உத்தரப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 

DIN

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், உத்தரப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தொடா்ந்து 40 நாள்களாக விசாரித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக, உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக அயோத்தி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் 4,000 பாதுகாப்புப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் குவித்துள்ளது. அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அயோத்தியில் வாழும் மக்களிடையே பதற்றநிலை காணப்படுகிறது.  

இதன் தொடர்ச்சியாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  உத்தரப் பிரதேச மாநிலத் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தலைமை நீதிபதி ஆலோசனை மேற்கொள்கிறார். அயோத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலமைப்பின் மீது அக்கறை இருப்பதாக பாஜக-ஆர்எஸ்எஸ் பாசங்கு: கார்கே!

தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

SCROLL FOR NEXT