இந்தியா

அயோத்தி தீர்ப்பு குறித்து வெளிநாட்டு தூதர்களிடம் விளக்கம் அளிக்கப்படும்

DIN


புதுதில்லி: அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து வெளிநாட்டு தூதர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது. 

அதில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச மாநில அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்கு தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய வரலாற்று தீர்ப்பு மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து வெளிநாட்டு தூதர்களிடம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கம் அளிப்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT