உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? வெங்கய்யா, சந்திரபாபு மற்றும் பவன் கல்யாணை கேள்வி கேட்ட ஜெகன்மோகன்
உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? என்று வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை நோக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயவாடா: உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? என்று வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை நோக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திராவில் இனி அரசுப் பள்ளிகள் ஆங்கில வழி பள்ளிகளாகச் செயல்படும் என்று மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு தரப்பிலும் பரவலாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் உங்கள் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்? என்று வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணை நோக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளானது தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி திங்களன்று நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜெகன்மோகன் பேசியதாவது:
இப்போதுள்ள உலகத்தில் போட்டியிடுவதென்றால் நமது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு என்பது அவசியம். எனவேதான் அதை மனதில் கொண்டு இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டவுடன் வெங்கய்யா நாயுடு, சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் அதை விமர்சிக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தங்கள் நெஞ்சில் கை வைத்து அவர்களது வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.