கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் நேற்று இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்
கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார் நேற்று இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பணப் பதுக்கல் வழக்கு தொடர்பாக புதுதில்லிக்கு சிவக்குமாரை நேரில் வரவழைத்து 3 நாட்கள் விசாரணை மேற்கொண்ட அமலாக்க இயக்குநரகம், செப்டம்பர் 3 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. 51 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், டி.கே. சிவக்குமார் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement