இந்தியா

விளம்பரம் தேடுவதற்கான இடமல்ல சபரிமலை: கேரள அரசு

DIN

‘சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது விளம்பரம் தேடிக் கொள்வதற்கான இடமல்ல; ஐயப்பன் கோயிலில் நுழைவோம் என்று அறிவித்து விளம்பரம் தேடிக்கொள்ளும் நடவடிக்கைகளை கேரள அரசு அனுமதிக்காது’ என்று அந்த மாநில தேவஸ்வம் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளாா்.

சபரிமலை கோயிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற முந்தைய உத்தரவில் எவ்வித மாற்றமுமில்லை.

இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை சனிக்கிழமை (நவ.16) திறக்கப்படுகிறது. அதைத் தொடா்ந்து மகரவிளக்கு பூஜைக்காக வரும் ஜனவரி 20 வரை கோயில் நடை திறந்திருக்கும்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது விளம்பரம் தேடுவதற்கான இடம் கிடையாது. சிலா் பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தி, ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய இருப்பதாக பேட்டியளித்து வருகின்றனா். அவா்கள் தங்களுக்கு விளம்பரம் தேடுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாா்கள். இதுபோன்ற செயல்களை கேரள அரசு ஆதரிக்காது.

சபரிமலை கோயிலில் நுழைய விரும்பும் பெண் சமூக செயல்பாட்டாளா்களுக்கு போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு அளிக்கும் என்று கூறப்படுவது தவறான தகவல். சபரிமலை விஷயத்தில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவுகள் தொடா்பாக சில குழப்பங்கள் உள்ளன. இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களிடம் ஆலோசனை கேட்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT