இந்தியா

தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 'வாவ்' சொல்ல வைக்கும் சிறப்பு வசதி

ENS


ஆக்ரா: தாஜ்மகாலைப் பார்க்க வரும் சுற்றலாப் பயணிகள், தாஜ்மகாலை சற்று தொலைவில் நின்று ஒட்டுமொத்த அழகையும் கண்டுரசிக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

தாஜ்மகாலின் அழகைக் காண புதிதாகக் கட்டப்பட்ட வியூ பாயிண்ட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு நின்றபடி, நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலின் அழகைக் கண்டுகளிக்கலாம்.

தாஜ்மகாலுக்கு அருகே மேஹ்தாப் பாக் தாஜ் வியூ பாயிண்ட்டை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் திறந்துவைத்தார். இந்த வியூ பாயிண்ட், தினமும் காலை 7-10 மணி வரையும், மாலையில் 7-10 மணி வரையும் திறக்கப்படும். கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா மேம்பாட்டுக் கழகத்தால் இந்த தாஜ் வியூ பாயிண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், இதுபோல ஏராளமான பகுதிகளில் வியூ பாயிண்ட்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாகத் திறக்கப்பட்ட வியூ பாயிண்டில் இருந்து தாஜ் மகாலைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இரவு நேரத்தில் தாஜ் மகாலின் அழகை இவ்வளவு அருகில் நின்று முழுமையாக பார்ப்பது என்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது என்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT