இந்தியா

மற்ற அமைச்சர்களுக்கு முன்மாதிரியான உ.பி மின்துறை அமைச்சர்!

மற்ற அமைச்சர்களுக்கு முன்மாதிரியாக அமைச்சர், தனது வீட்டில் ப்ரீபெய்ட் மின்சார மீட்டரை பொருத்தியுள்ளார்.

Muthumari

அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்களது இல்லத்தில் ப்ரீபெய்ட் மின்சார மீட்டர்களை அமைக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில மின் அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், அதற்கு முன்மாதிரியாக அமைச்சர், தனது வீட்டில் ப்ரீபெய்ட் மின்சார மீட்டரைப் பொருத்தியுள்ளார்.

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தவும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணங்கள் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாலும் இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதற்காக, காளிதாஸ் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் சர்மா 25 கி.வாட் திறன் கொண்ட ப்ரீபெய்ட் மீட்டரை நிறுவியுள்ளார். ப்ரீபெய்ட் மீட்டரில் இருப்பு தீர்ந்தவுடன் மின்சாரம் தானாகத் துண்டிக்கப்படும். இதனால் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தேவைக்கு மட்டுமே  மின்சாரத்தை பயன்படுத்துவர் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், அமைச்சர் தனது வீட்டில் மீட்டரை மீட்டரை பொருத்தியுள்ளதன் மூலமாக, மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் ப்ரீபெய்ட் மீட்டரை பொருத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேபோன்று முக்கியப் பிரமுகர்களும் தங்களது வீட்டில்  ப்ரீபெய்ட் மீட்டரை பொருத்த அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT