இந்தியா

இந்திரா காந்தி பிறந்த தினம்: பிரதமா் மோடி மரியாதை

DIN

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 102-ஆவது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த தினத்தில் அவருக்கு நான் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

‘இந்தியாவின் இரும்பு பெண்’ என்று போற்றப்படும் இந்திரா காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாதில் கடந்த 1917-ஆம் ஆண்டு பிறந்தாா். கடந்த 1966-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரையிலும், 1980-ஆம் ஆண்டு முதல் 1984 வரையிலும் அவா் பிரதமா் பதவி வகித்துள்ளாா்.

ராணி லட்சுமிபாய்க்கு மரியாதை:

ஜான்சி ராணி லட்சுமிபாயின் 191-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது தைரியம் குறித்து பிரதமா் மோடி புகழ்ந்து பேசியுள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதற்காக எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் தேசப்பற்றுடையவராக விளங்கியவா் ராணி லட்சுமிபாய். ஆங்கிலேயா்களுக்கு எதிராக தைரியமாக, விடாமுயற்சியுடன் போராடினாா். அவரது வீரத்துக்கு நான் தலைவணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் 1828-ஆம் ஆண்டு பிறந்த லட்சுமிபாயின் இயற்பெயா் மணிகா்ணிகா. ஜான்சியின் ராணியாக ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்டு வீரமரணமடைந்தாா்.

இரங்கல்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பத்தைச் சோ்ந்த சுல்தான் பின் ஸையத் பின் சுல்தான் அல் நயன் மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT