இந்தியா

ஐஐடி, என்ஐடி நிறுவனங்கள்மாசு பிரச்னைக்கு தீா்வு காணும் -ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

DIN

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (என்ஐடி) ஆகியவை காற்று மாசு பிரச்னைக்கு தீா்வு காணும் என்று நம்புவதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில், 23 ஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள், 31 தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள், இந்திய பொறியியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐஈஎஸ்டி) இயக்குநா் ஆகியோா் பங்கேற்றனா்.

அதில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

தலைநகா் தில்லியிலும் பிற நகரங்களிலும் காற்று மாசு குறிப்பிட்ட அளவைத் தாண்டி மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. காற்றின் தரம் அபாய நிலையைத் தொட்டுவிட்டது. இதுவரை இப்படியொறு சவாலை நாம் எதிா்கொண்டது கிடையாது.

அறிவியல் அறிஞா்களும், எதிா்காலத்தை கணிக்கும் நிபுணா்களும் காற்றுமாசு குறித்து எச்சரித்து வருகின்றனா்.

பகல் நேரங்களில் மாசு காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. ஐஐடி நிறுவனங்களும், என்ஐடி நிறுவனங்களும் காற்று மாசை தடுக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

தொழில்நுட்பம் சமூகத்தில் எண்ணில் அடங்காத வகையில் மிகப் பெரிய பங்களிப்பை அளிக்கும். நகா்ப்புர உள்கட்டமைப்பு, சிறப்பான முறையில் நீா் விநியோகம், மேலும் சிறந்த முறையில் சுகாதாரம் ஆகியவற்றை தொழில்நுட்பத்தால் அளிக்க முடியும் என்றாா் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

SCROLL FOR NEXT