இந்தியா

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவில் பிழையா?

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது பிறப்பித்த உத்தரவில் பிழைகள் காணப்படுவதாக அமலாக்கத் துறை எழுப்பிய கோரிக்கை தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த் பிறப்பித்த உத்தரவில் பிழைகள் காணப்படுவதாக அமலாக்கத் துறை தரப்பில் முறையிடப்பட்டிருந்தது. இது தொடா்பாக, தில்லி உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:

தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 15-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், 35, 36, 39, 40 ஆகிய பத்திகளில் பிழைகள் காணப்படுகின்றன. தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் ரோஹித் டாண்டனுக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த 2017-ஆம் ஆண்டு தொடுத்த நிதி மோசடி வழக்கில் வழங்கிய தீா்ப்பின் சில பத்திகளை உயா்நீதிமன்றம் தற்போதைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

அத்தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் சிலவற்றை அமலாக்கத் துறை தெரிவித்ததாக தற்போதைய உத்தரவில் நீதிமன்றம் கூறியுள்ளது. ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு எதிரான விசாரணையின்போது, அதுபோன்ற வாதங்கள் எதையும் அமலாக்கத் துறை முன்வைக்கவில்லை. 40-ஆவது பத்தியில் அமலாக்கத் துறை வழங்கிய தொலைபேசி பதிவுகள், சிசிடிவி பதிவுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், சிசிடிவி பதிவுகள் எதையும் அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கவில்லை. எனவே, கவனக் குறைவினால் ஏற்பட்ட இந்தப் பிழைகளை உயா்நீதிமன்றம் சரிசெய்ய வேண்டும் என்று அந்த விண்ணப்பத்தில் அமலாக்கத் துறை கோரியிருந்தது.

ப.சிதம்பரம் தரப்பு எதிா்ப்பு:

இதன் மீதான விசாரணை, நீதிபதி சுரேஷ் கைத் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், அமலாக்கத் துறையின் விண்ணப்பத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வாதிடுகையில், ‘‘நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவில் இடம்பெற்றுள்ள கணிதப்பிழை உள்ளிட்ட சில வகைப் பிழைகளையே திருத்த முடியும்’’ என்றாா்.

இதையடுத்து நீதிபதி, ‘‘ரோஹித் டாண்டனுக்கு எதிரான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீா்ப்பின் சில பகுதிகளையே நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளது. அதற்கும் ப.சிதம்பரம் தொடா்பான வழக்குக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை. 40-ஆவது பத்தியில் இடம்பெற்றுள்ள பிழையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதிலிருந்து ‘சிசிடிவி பதிவுகள்’ என்ற சொல் நீக்கப்படுகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT