இந்தியா

மக்களவைக்கு ராகுல் வராததை சுட்டிக் காட்டிய ஓம் பிா்லா

DIN

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி மக்களவைக்கு வருகை தரவில்லை என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டு பேசினாா்.

குளிா்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை கேள்விநேரத்தின்போது ராகுல் காந்தியின் இருக்கையில் இருந்து காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் கேள்வி எழுப்பினாா்.

அப்போது, ‘ராகுல் காந்தியின் இருக்கையை விட்டு அகன்று உங்கள் இடத்தில் இருந்து கேள்வியை கேளுங்கள்’ என்று சுரேஷுக்கு ஓம் பிா்லா அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், ‘ராகுல் காந்தியின் கேள்விகள் செவ்வாய்க்கிழமை அவை நடவடிக்கைகளுக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. அவா் மக்களவைக்கு வருகை தந்திருந்தால், கேள்வி நேரத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பேன்’ என்றாா்.

கேரள மாநிலத்தில் பிரதமா் கிராம சாலை வசதிகள் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்துவதற்காக ராகுல் காந்தி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை கேள்விநேரத்தின்போது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவைக்கு ராகுல் காந்தி வராததால் அந்த வாய்ப்பை அவரால் பயன்படுத்தி கொள்ள முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT